நியூயார்க், செப். 7:தன்னை எதிர்த்து விளையாடிய லாத்வியா வீராங்கனையை, எளிதாக வீழ்த்திவிட்டு இறுதிப்போட்டிக்குள் அசால்ட்டாக நுழைந்துள்ளார், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. இதில் பெண்கள் அரையிறுதி ஆட்டங்களில் லாத்வியாவின் செவாஸ்டோவாவை, அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். இதில் செரினா, 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார். இதனையடுத்து, இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்.