மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=35284
Export date: Wed Nov 21 17:46:02 2018 / +0000 GMT

தற்கொலை மிரட்டல் விடுத்த இயக்குனர்


சென்னை, செப்.7: படவாய்ப்பு இல்லாததாலும், பண நெருக்கடியாலும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்த இயக்குனரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய்காந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் செந்தில்நாதன். பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்தார். அந்த நாடகத்தில் இருந்தும் இவர் தூக்கப்பட்டதால் விரக்தியடைந்தார்.

இந்நிலையில் சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இயக்கி வந்துள்ளார். அந்த படத்தை 4 ஆண்டுகளாக வெளியிட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று திடீரென வீட்டில் இருந்து புறப்பட்டு எங்கோ சென்றுள்ளார். பின்னர் தனது தயாரிப்பாளர் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். இன்று மாலைக்குள் நான் தற்கொலை செய்து கொள்ளப்பேகிறேன். நீ வரும்போது அவசியம் ஒரு மாலை வாங்கி வா என கூறி உள்ளார்.

இதை தொடர்ந்து அந்த தயாரிப்பாளர் போலீசாரை தொடர்பு கொண்டு தகவலை கூறியுள்ளார். பின்னர் போலீசார் அவரை தேடி பிடித்து பத்திரமாக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
Post date: 2018-09-07 09:29:34
Post date GMT: 2018-09-07 09:29:34

Post modified date: 2018-09-07 09:29:34
Post modified date GMT: 2018-09-07 09:29:34

Export date: Wed Nov 21 17:46:02 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com