Home » இந்தியா » எம்எல்ஏ நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம்

எம்எல்ஏ நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம்

மும்பை, செப்.7:மகாராஷ்டிர மாநில பிஜேபி எம்எல்ஏ ராம் கடம் நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பணம் தருவதாக காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுபோத் சாஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர்கள் திரண்டிருந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராம் கடம், இளைஞர்கள் காதலிக்கும் பெண்கள் அந்த காதலை ஏற்க மறுத்தால், அவர்களை கடத்திக் கொண்டு வர தயார் என்று கூறியிருந்தார்.

இந்த கருத்து மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு போட்டியாக காங்கிரஸ் தலைவர் டுவிட்டரில் வெகுமதி அறிவித்துள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*