Home » Flash News » பரோல் மனு: நளினி வாபஸ்

பரோல் மனு: நளினி வாபஸ்

சென்னை, செப்.7:ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்க கேட்டு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார் .

வேலூர் பெண்கள் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோலில் வெளியே செல்ல அனுமதி வழங்க கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி பி.என். பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பரோல் கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றக் கொண்ட நீதிபதி பி.என்.பிரகாஷ் நளினியின் மனுவை தள்ளுபடி செய்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*