Home » Flash News » தவறு செய்தவர்களுக்கு தண்டனை:ஜெயக்குமார்

தவறு செய்தவர்களுக்கு தண்டனை:ஜெயக்குமார்

சென்னை, செப்.7:குட்கா ஊழல் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கபடவேண்டும். இவர்களை சட்டத்திற்கு முன்பு நிறுத்தவேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சிபிஐக்கு எதை எப்படி செய்யவேண்டும் என்பது நன்றாக தெரியும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கேட்டதற்கு இந்த விலையை பாதியாக குறைக்க வேண்டும். இது மத்திய அரசால் தான் முடியும். மாநில அரசால் வாட் வரியை குறைக்க முடியாது. உற்பத்தி வரியை குறைப்பது மத்திய அரசுக்கு பெரிய விஷயம் அல்ல என்றார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம். இந்த விசயத்தில் மத்தியில் 17 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தூங்கி விட்டு இன்று 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*