Home » Flash News » குட்கா ஊழலில் 20 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ முடிவு

குட்கா ஊழலில் 20 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ முடிவு

சென்னை, செப்.7:குட்கா ஊழல் விவகாரத்தில் மேலும் சில அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். 20 பேருக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் சோதனை யில் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களை டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் முக்கிய புள்ளிகள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை பிரபல பான்பராக் தயாரிப்பாளர் மாதவராவின் ரகசிய டைரி அம்பல படுத்தியது. மாதவராவிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் உணவு பாதுகாப்பு, கலால் துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றிய சம்பத் இப்போது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார். ராயப்பேட்டையில் போலீஸ் குடியிருப்பில் உள்ள இவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இரண்டு நாள் நடத்திய சோதனை அடிப்படையில் பான்பராக் ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா சீனிவாசராவ் மற்றும் உணவு பாதுகாப்பு, கலால் துறை அதிகாரிகள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரும் 20 ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் உள்ள அவர்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கைப்பற்றபட்ட ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் டெல்லிக்கு கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆய்விற்கு பிறகு சம்மந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை டெல்லிக்கு வரழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மேலும் 20 பேருக்கு சம்மன் அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் இதில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே கைது நடவடிக்கை விரைவில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக காவல் துறை வரலாற்றில் டிஜிபி ஒருவரது இல்லத்தில் சிபிஐ சோதனை நடந்தது இல்லை என்பதால் டிஜிபி ராஜேந்திரன் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், ஆனால் அரசு தரப்பில் அதை ஏற்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவர் ராஜினாமா செய்தால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை பொருத்து இருக்கலாம் என சட்ட நிபுணர்கள் ஆலோசனை கூறியதாக தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*