Home » தமிழ்நாடு » நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும்:செங்கோட்டையன்

நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும்:செங்கோட்டையன்

சென்னை, செப்.6:தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத்தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

சென்னை அடையாறில் கைவினைப்பொருட்களுக்கான கண்காட்சியை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கான விடுமுறையின் போது, அருகாமையில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அவர்களை அழைத்துச்செல்வதற்கு அரசு பரிசீலித்து வருகிறாம். மேலும், 412 நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் தமிழகம் முழுவதும் செயல்படத் தொடங்கும், 3200 ஆசிரியர்களை கொண்டு, மாணவர்களுக்கு 3 மணிநேர பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும், மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கப்படும், வார நாட்களிலும், மாணவர்கள் விரும்பினால் , அவர்களுக்கு ஒருமணிநேர பயிற்சி வழங்கப்படும் , பொதுநூலகத்துறைக்கு இயக்குனரை நியமிப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவிருந்தாலும், அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வெழுதும் நிலை இனி வராது . வரும் ஆண்டில் இருந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து , குறைந்தபட்சம் 1000 மாணவர்கள் மருத்துவர்களாகும் வகையில் , அம்மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி ,அரசு நீட் பயிற்சி மையங்களில் வழங்கப்படும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*