Home » Flash News » கார் பாலத்தில் மோதி கணவன், மனைவி பலி

கார் பாலத்தில் மோதி கணவன், மனைவி பலி

திருச்சி, செப்.6:மதுரையில் உள்ள மகனை பார்க்க சென்ற போது பாலத்தில் கார் கவிழந்து கணவன் மனைவி உட்பட மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை நடந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி அருகே துறையூர் அடுத்த துரைமங்கலம் மணியாரப்பட்டிக் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 65). இவரது மனைவி சின்னம்மாள் (வயது58). இவர்களது மகன் கண்ணன்.

கண்ணன் மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மகனை பார்ப்பதற்காக வெள்ளையன், அவரது மனைவி சின்னம்மாள் மற்றும் கண்ணனின் மைத்துனர் முசிறியைச்சேர்ந்தவர் ஜெயராமன் (வயது33)ஆகிய மூன்றும் பேரும் காரில் நேற்று மதுரைக்கு புறப்பட்டுசென்றனர். காரை ஜெயராமன் ஓட்டிச்சென்றுள்ளார்.

இவர்கள் சென்ற கார் அதிகாலை 1.30 மணியளவில் திருச்சி யாகபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது துவரங்குறிச்சி அருகே யாகம்புரம் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்றபோது பாலத்தின் சுவற்றில் மோதி நிலை தடுமாறி கார் கவிழ்ந்து.இந்த விபத்தில் காரில் சென்ற வெள்ளையன், சின்னம்மாள்,காரை ஓட்டிய ஜெயராமன் ஆகிய மூன்றுபேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதிகாலை நேரம் என்பதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசுக்கு தகவல்கொடுத்தனர்.

அந்த தகவலின் படி துவரங்குறிச்சி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன்றுபேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிய ஜெயராமன் தூக்க கலகத்தில் ஓட்டியதால்இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலியான சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*