Home » அரசியல் » கூட்டுறவு தேர்தல்: அதிமுக வெற்றி

கூட்டுறவு தேர்தல்: அதிமுக வெற்றி

திருவாரூர், செப்.6:திருவாரூர் மாவட்டத்தில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் நடைபெற்ற நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றுள்ளது.

மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்ககுழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக தரப்பில் 11பேரும், திமுக கூட்டணி தரப்பில் 11 பேரும் சுயேட்சைகளாக 8 பேரும் ஆக கூடுதல் 30 பேரும், கட்டக்குடி கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் 11 பேரும் திமுக கூட்டணி சார்பில் 11 பேரும் ஆக கூடுதலாக 22பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மணலி கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர். இதன்மூலம் மணலி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை அதிமுக கைப்பற்றியது.

கட்டக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி 250 வாக்குகள், இளமாறன் 239 வாக்குகள், கலியபெருமாள் 254 வாக்குகள், அமுதாதேவி 243 வாக்குகள், பிச்சைக்கண்ணு 242 வாக்குகள், டேவிட்ராஜ் 241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் செப் 8-ந் தேதி நடைபெறுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*