Home » Flash News » எலிக்காய்ச்சல்:கேரளாவுக்கு சென்ற தமிழக பெண் பலி

எலிக்காய்ச்சல்:கேரளாவுக்கு சென்ற தமிழக பெண் பலி

கோவை, செப்.6:கேரளாவுக்கு சென்று திரும்பிய திருப்பூரை சேர்ந்த பெண் எலி காய்ச்சலால் பாதிக்கபட்டு மரணமடைந்துள்ளார். இதையடுத்து திருப்பூர் மற்றும் தமிழக கேரள எல்லையில் எலி காய்ச்சலை தடுக்க தீவிர மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன.

கேரளாவில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்திற்கு பிறகு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மாநிலத்தில் இதுவரை 12 க்கும் அதிகமானோர் இந்த காய்ச்சாலால் பலியாகியுள்ளனர்.

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு எலி காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை எடுக்கபட்டுள்ளன. கோவை உள்ளிட்ட மாநில எல்லை ஒரங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டு கேரளாவிலிருந்து வருபவர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தமிழகத்தில் அனுமதிக்கபடுகிறார்கள்.

இதுகுறித்து கோவை சுகாதார சேவை துணை இயக்குனர் பானுமதி கூறுகையில், காய்ச்சல், தலைவலி, தசைவலி, தொடர் காய்ச்சல், கண்கள் சிவந்து காணப்படுதல் போன்றவை எலி காய்ச்சலின் அறிகுறி என்பதால் இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.

தமிழக, கேரள எல்லைகளிலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கபட்டுள்ளன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சமத்துவுபுரத்தை சேர்ந்த காந்திமதி (வயது 52) என்ற பெண் எலி காய்ச்சலால் பாதிக்கபட்டு மரணமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. சுப்பிரமணி என்பவரின் மனைவியான இவர் கேரளா சென்றபோது எலி காய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து திருப்பூர் சுகாதார துறை அதிகாரி எஸ்.ஜெயந்தி கூறுகையில், காந்திமதி உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு மஞ்சள் காமாலை போன் நோய்களாலும் பாதிக்கபட்டு இதன் காரணமாக அவரது நுரையீரலின் செயல்பாடும் பாதிக்கபட்டு இருந்தது. கடந்த ஒரு வாரமாகவே அவருக்கு கடும் காய்ச்சல் இருந்திருக்கிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கபட்டு இருந்தார். பல வித நோய்கள் காரணமாக அவர் பலியாகியிருக்கிறார். தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கபட்டு இருப்பதால் யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என்றார்.

மேலும் சமத்துவபுரம் கிராமத்தில் தீவிர மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது. அங்கு வேறு யாருக்கும் கடுமையான காய்ச்சல் இருப்பதற்கான அறிகுறி இல்லை என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*