Home » தமிழ்நாடு » லாரி மோதி பெண் பலி

லாரி மோதி பெண் பலி

செங்குன்றம், செப்.6:செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

புழல் அருகே உள்ள லட்சுமிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் புஷ்பா(வயது 32). இவர் நேற்றிரவு செங்குன்றத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு வளையல் காப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது தண்டல்கழனி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த லாரி சட்டென மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உடல் நசுங்கி பலியானார்.

மேலும் தகவல் கிடைக்கபெற்று சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லாரியை ஓட்டி வந்து விபத்துக்குள்ளாக்கிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*