Home » சினிமா » பாலியல் தொழிலாளியாக நடித்தது ஏன்? மனம் திறந்த சதா

பாலியல் தொழிலாளியாக நடித்தது ஏன்? மனம் திறந்த சதா

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சதா புதிய பரிமாணத்தில் நடித்துள்ள படம் டார்ச் லைட். இப்படத்தை அப்துல் மஜீத் இயக்கி உள்ளார்.

ஜே.வி. ஒளிப்பதிவு செய்ய சக்திவேல் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சதா கூறியதாவது:-

கேள்வி:- டார்ச் லைட் படத்தின் கதை என்ன?
பதில்:- தமிழக நெடுஞ்சாலைகளில் இரவு நேரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பற்றிய கதை. 80களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை மஜீத் இயக்கி உள்ளார்.

கே:- இதில் விபச்சாரியாக நீங்கள் நடித்துள்ளீர்களா?
ப:- ஆமாம். இந்த படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியவுடன் கண்கள் குளமாகி அழத்தொடங்கி விட்டேன். பல கதாநாயகிகள் இதில் நடிக்க மறுத்த போதிலும் நான் இதில் நடித்தது இதன் கதை ஓட்டத்திற்காக தான். பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்கள் என்பதை இந்த படத்தின் மூலம் உணர்ந்தேன்.

கே:- முன்னணி நடிகையாக இருந்த உங்களுக்கு வாய்ப்பு குறைந்தது ஏன்?
ப:- அதை நீங்கள் இங்குள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும்.

கே:- வடிவேலுவுக்கு கதாநாயகியாக நடித்ததால் வாய்ப்பு இல்லாமல் போனதா?
ப:- அப்படி சொல்ல முடியாது. எனக்கு அந்த நேரத்தில் இயக்குனர் என் கதாபாத்திரம் பற்றி சொன்னது பிடித்தது. அதனால் நடித்தேன். அந்த படம் வெற்றியடைந்து இருந்தால் அது பற்றி பேசியிருக்க மாட்டோம். நான் மும்பையில் இருப்பதால் இங்கு என்ன நிலைமை என்பதை என்னால் உணர முடியவில்லை.

கே:- காதல் வலையில் இன்னும் நீங்கள் விழவில்லையே?
ப:- எனக்கு ஏற்றார்போல பாய் பிரண்ட் கிடைக்கவில்லை. நீங்களே நல்ல பையனாக இருந்தால் சொல்லுங்கள்.

கே:- திருமணம் எப்போது செய்து கொள்ளப்போகிறீர்கள்?
ப:- திருமணம் பற்றி இப்போதைக்கு ஐடியா இல்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசை.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*