Home » சினிமா » ரஹ்மான் இசையில் ஜெவுக்கு பிடித்த பாடல் எது?: வைரமுத்து

ரஹ்மான் இசையில் ஜெவுக்கு பிடித்த பாடல் எது?: வைரமுத்து

இயக்குனர் மணிரத்னம் இயக்கி உள்ள படம் செக்கசிவந்த வானம். இதில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ், டயானா ஆகியோர் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் இம்மாத இறுதியில் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களை லைவாக வாசித்து பாடினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற வைரமுத்து பேசுகையில், கடந்த 35 வருடமாக எங்களின் மூவர் கூட்டணி தொடர்கிறது. காலத்திற்கு ஏற்றார்போல் தொடர்ந்து படங்களை தருபவர் மணிரத்னம். இந்த படமும் வெற்றி படம் என்பதில் ஐயமில்லை என்றார். பின்னர் ரஹ்மான் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து ஆகியோரிடம் பாடகர் கார்த்தி, சின்மயி கேட்க வைரமுத்து உயிரே.. உயிரே.. என்றும், மணிரத்னம் தமிழா.. தமிழா.. என்றும், ரஹ்மான் கண்ணாலனே.. என்றும் சொன்னார்கள். பின்னர் வைரமுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாம்பே படம் வெளியாகும் முன்பு ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு நேராக வந்து என்ன புதிய பாடல் கம்போஸ் செய்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது ரஹ்மான் கண்ணாலனே பாடலை ஜெயலலிதாவுக்கு போட்டு காண்பித்துள்ளார்.

பாடலை பார்த்து பரவசமான அவர் ரஹ்மானை வெகுவாக பாராட்டினார் என்ற உண்மையை சபையில் கூறினார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் அரவிந்த் சாமி, சிம்பு, அருண்விஜய், நடிகைகள் அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா, நடிகர்கள் தியாகராஜனர், மன்சூரலிகான், இயக்குனர் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜய் சேதுபதி, ஜோதிகா மிஸ்சிங்: நேற்றைய இசை வெளியீட்டு விழாவில் 3 கதாநாயகர்கள், 3 காதாநாயகிகள் வந்திருந்தனர். இருப்பினும் இன்னொரு ஜோடியான விஜய்சேதுபதி, ஜோதிகா வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*