Home » குற்றம் » ஓடுதளத்தில் வேன்: விமான நிலையத்தில் பரபரப்பு

ஓடுதளத்தில் வேன்: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை, செப்.6: சென்னை விமான நிலையத்தின் ஓடு தளத்தில் விமானம் இறங்கும்போது திடீரென்று மினி வேன் ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மினி வேனை கண்டு அதிர்ச்சி அடைந்த விமானி விமானத்தை சாதூர்யமாக வேறு திசைக்கு மாற்றி ஓட்டியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விமான நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் குழு சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*