Home » அரசியல் » ‘கட்சிகளை உடைப்பது எங்கள் வேலை இல்லை’பொன். ராதாகிருஷ்ணன் 

‘கட்சிகளை உடைப்பது எங்கள் வேலை இல்லை’பொன். ராதாகிருஷ்ணன் 

திருச்சி, செப்.6: கட்சிகளை உடைப்பது எங்கள் வேலை இல்லை என்றும், தமிழகத்தில் பிஜேபியை வளர்ப்பதே எங்கள் நோக்கம் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அழகிரியின் பேரணிக்கு பின்னால் பிஜேபி இருப்பதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், எல்லாத்துக்கும் நாங்கள்தானா என கிண்டலாக கேட்டார். அதே சமயம் சென்னையில் அழகிரி தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணி தமிழக அரசியலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் பிஜேபியின் வளர்ச்சி மற்ற கட்சிகளை கட்டுப்படுத்தியுள்ளது. எந்த கட்சியையும் உடைப்பது பிஜேபியின் வேலை இல்லை. எங்கள் கட்சியை வளர்ப்பது தான் முதல் வேலை.

பிஜேபி சொல்வதை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டிய நிலை தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பிஜேபி சொல்வதை வைத்துதான் அரசியல் செய்கின்றனர். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நிலையில் பிஜேபி உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*