Home » சினிமா » ரஜினி லடாக் சென்றார்

ரஜினி லடாக் சென்றார்

சென்னை, செப்.6: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக இன்று காலை லடாக் புறப்பட்டு சென்றார். இளம் இயக்குனர் கார்த்திக்
சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடைபெற்று வந்தது.

அதனை தொடர்ந்து இமயமலை அருகே 2-வது கட்டப்படப்பிடிப்பு நடந்து முடிந்தது. பின்னர் சென்னை செங்குன்றம் அருகே பிரமாண்ட செட்டில் ஷýட்டிங் நடைபெற்றது. இந்நிலையில், 3-வது கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

ஏர்ப்போர்ட்டில் செய்தியாளர்கள் அவரிடம் குட்கா விவகாரத்தில் அமைச்சர், டிஜிபி வீட்டில் சிபிஐ சோதனை நடந்தது குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் இது குறித்து தான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.பின்னர் தமிழிசையிடம் வாக்குவாதம் செய்த சோபியா குறித்து கேட்டதற்கு நோ கமென்ட்ஸ் என்று கூறிவிட்டு ரஜினி வேகமாக சென்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*