Home » குற்றம் » கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை

கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை

செங்குன்றம், செப்.6: செங்குன்றம் அருகே கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை பார்த்து 7 வயது மகள் கதறி அழுத காட்சி கல் மனதையும் கலங்க வைத்தது.

செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது 32 ) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுதா (வயது28). இவர்களுக்கு 7 வயதில் யோகிதா என்ற மகள் உள்ளார்.

நேற்றிரவு குழந்தையுடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். ஒரு அறையில் யோகிதாவும் மற்றொரு அறையில் சுரேஷ், சுதா ஆகியோர் தூங்கியுள்ளனர்.

சுதா எப்போதும் அதிகாலையில் எழுந்திருப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் எழுந்திருக்கவில்லையாம்.

இதைபார்த்து பக்கத்து வீட்டு பெண்கள் சுதாவின் வீட்டு கதவை தட்டியுள்ளனர். கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு அறையில் கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கியதை கண்டு அலறி அடித்துக்கொண்டுவெளியில் ஓடி வந்தனர். மற்றொரு அறையில் யோகிதா தூங்கிகொண்டிருந்தார்.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகார் தொடர்பாக செங்குன்றம் போலீசார் இன்ஸ் பெக்டர் கருணாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டேன்லி அரசுமருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்த கொண்டார்களா அல்லது கடன் பிரச்சனையா என்றும் 7 வயதுமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*