Home » சென்னை » நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது

நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது

சென்னை, செப்.6: தமிழக அரசு சொந்த முயற்சியால் மக்கள் தொகையை கட்டுபடுத்தி இருக்கிறது என்றும், எனவே  2011 ல் எடுக்கபட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்தி தமிழகத்திற்கு வழங்கும் நிதி ஒதுக்கீட்டை குறைக்க கூடது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் வந்துள்ள 15 வது நிதிக்குழுவினர் நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகேட்டனர்.  இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். தமிழக திட்டங்களுக்கு வழங்கவேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வருடன் ஆலோசிக்கபட்டது.

இந்த குழு கூட்டத்தில் முதல்வர் பேசியது வருமாறு: 15 வது நிதிகுழுவில் குறிபிட வேண்டிய அம்சங்கள் குறித்து குழுவின் தலைவருக்கு நான் ஏற்கனவே கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன். நிதி ஒதுக்கீட்டுக்கு கவர்ச்சி திட்டங்களுக்கான செலவினங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் 2011 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழக அரசு சொந்த முயற்சியால் கட்டுப்படுத்தியிருக்கிறது.

எனவே நிதி ஒதுக்கீட்டை பொருத்தவரை 1971 ம் ஆண்டின் தரவுகளையே அமல்படுத்த வேண்டும். பள்ளிகுழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தை சிலர் கவர்ச்சி திட்டம் என அழைக்கிறார்கள்.

ஆனால் இந்த மதிய உணவு திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு அங்கமாக உள்ளது. எனவே இத்தகைய திட்டத்தை கவர்ச்சி திட்டமாக குறிப்பிட இயலாது. பல்வேறு மாநில சட்டமன்றங்களின் ஒட்டுமொத்த முடிவை இந்த நிதிகுழு குறைத்து மதிப்பிட கூடாது.
தமிழக அரசு மத்திய அரசின் முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இருப்பினும் ஊக்கதொகை குறித்து முக்கிய கொள்கைகள் குறித்து எங்களுக்கு சில பிரச்சனைகள் உள்ளது .

ஊக்கதொகை கொள்கை குறிப்புகள் அரசியல் பிரிவு 280 க்கு எதிரானது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். எனவே தமிழகத்திற்கு நிதிஒதுக்கிட்டை அதிகரிக்க வேண்டும். எந்த விதத்திலும் குறைக்ககூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*