This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Wed Nov 21 11:58:24 2018 / +0000 GMT

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


டோக்கியோ, செப்.6: ஜப்பானில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்னும் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.7 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 40 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு மின்சார இணைப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல வீடுகள் இடிந்து நாசமாகின.இதையடுத்து, மண் சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Post date: 2018-09-06 10:14:00
Post date GMT: 2018-09-06 10:14:00
Post modified date: 2018-09-06 10:14:00
Post modified date GMT: 2018-09-06 10:14:00
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com