புதுடெல்லி, செப்.6:செல்போன் மற்றும் கம்ப் யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கண்கள் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல மணி நேரம் தொடர்ந்து இந்த கருவிகளை பயன்படுத்துவதால் கண்களில் நீர் சத்து குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர் களுக்கு இந்த குறைபாடு அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. கண்களுக்கு மட்டுமல்லாமல் மற்றும் கழுத்து, தோள்பட்டை, முதுகு வலி ஆகியவை ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.