This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Fri Sep 21 19:11:54 2018 / +0000 GMT

டேவிஸ் கோப்பை: இந்திய முன்னணி வீரர்கள் விலகல்


புதுடெல்லி, செப். 6: டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-செர்பியா இடையிலான ஆட்டம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவின் கிரால்ஜிவோ நகரில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி மற்றும் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் இரட்டையரில் தங்கம் வென்ற திவிஜ் சரண் ஆகியோர் விலகியுள்ளனர்.

திவிஜ் சரண் தோள்பட்டை காயத்தாலும், அமெரிக்க ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய யுகி பாம்ப்ரி, கால் முட்டி காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார்கள். சகெத் மைனெனி, முதலில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார்.

இப்போது அவர் பாம்ப்ரிக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதே போல் திவிஜ் சரண் இடத்தில் தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி ஆட உள்ளார். ஆனால், மாற்று ஆட்டக்காரராக இடம் பெற 21 வயதான டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகல் மறுத்து விட்டார். இதையடுத்து புனேயைச் சேர்ந்த அர்ஜூன் காதே மாற்று வீரராக தேர்வாகி உள்ளார்.
Post date: 2018-09-06 10:03:27
Post date GMT: 2018-09-06 10:03:27
Post modified date: 2018-09-06 10:03:27
Post modified date GMT: 2018-09-06 10:03:27
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com