This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Fri Sep 21 14:15:47 2018 / +0000 GMT

அரபு எமிரேட்ஸ் - ஹாங்காங் இடையே கடும் போட்டி


மலேஷியா, செப். 6:  ஆசிய கோப்பையில் பங்கேற்கும் 6-வது அணிக்கான தகுதிச்சுற்று போட்டியின் இறுதி போட்டி, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹாங்காங் அணிகள் இடையே நாளை நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியா,இலங்கை,வங்கதேசம்,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக விளையாட தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரில் பங்குபெறும் ஆறாவது அணிக்கான தகுதி சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் நாளை இறுதி போட்டியில் பங்குபெறுகின்றன.

நாளை நடக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரில் பி பிரிவில் இடம்பெறும். பி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post date: 2018-09-06 09:54:26
Post date GMT: 2018-09-06 09:54:26
Post modified date: 2018-09-06 09:54:26
Post modified date GMT: 2018-09-06 09:54:26
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com