Home » Flash News » குட்கா வழக்கு: இடைத்தரகர்கள் உள்பட 6 பேர் கைது

குட்கா வழக்கு: இடைத்தரகர்கள் உள்பட 6 பேர் கைது

சென்னை, செப்.6:குட்கா ஊழல் விவகாரத்தில் இன்று 2-வது நாளாக சிபிஐ சோதனை நீடித்து வருகிறது.

இதனிடையே நேற்று நடத்திய விசாரணை அடிப்படையில் இடைத்தரகர்களாக செயல்பட்டு நந்தகுமார், ராகேஷ் உள்பட 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் பராக் உள்ளிட்ட போதைப்பொருட் களை விற்பனை செய்வதற்கு தமிழகத்தில் அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பிரபல குட்கா ஏஜெண்ட் மாதவராவின் இல்லம் மற்றும் குடோனில் நடைபெற்ற போதையில் கைப்பற்றப்பட்ட 2 டைரிகளில் அவர் யார்? யாருக்கு மாதந்தோறும் பணம் கொடுத்தார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரூ.40 கோடி வரை லஞ்சமாக கொடுத்ததற்கான குறிப்புகள் அதில் எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், ஏசிபி மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், லட்சுமி நாராயண், இ.சிவகுமார் மத்திய சுங்கத்துறை அதிகாரி ஆர்.குல்சார்பேகம், என்.கே.பாண்டியன், சேஷாத்திரி, வணிகவரித்துறையைச் சேர்ந்த பன்னீர்செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன் மற்றும் எம்டிஎம் டுபாக்கோ வணிக நிறுவனத்தின் இயக்குனர் களான உமாசங்கர், குட்கா ஏ.வி. மாதவராவ் ஆகியோரது இல்லங்களில் சோதனை நடைபெற்று
உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட4 மாநிலங் களிலும் இந்த சோதனை நடைபெற்றது. டிஜிபி ராஜேந்திரனினில் இல்லத் தில் நேற்றிரவு சோதனை முடிந்து விட்டது. நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் இல்லத்தில் காலை 8 மணி வரை சோதனை நீடித்தது. 2 பைகள் நிறையகைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் 7 சிபிஐ அதிகாரிகள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நீடித்து வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேற்று சம்பந்தப்பட்டவர் களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குட்கா விவகாரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டு பணம் வாங்கி கொடுத்தவர்கள் பற்றிய அடையாளம் தெரியவந்திருப்பதாக சிபிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று காலை ராகேஷ், நந்தகுமார் ஆகிய இருவரை சிபிஐ கைது செய்தது. அதனைத் தொடர்ந்து குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ், அவரது தொழில் பங்குதாரர் சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார், கலால்துறை அதிகாரி எம்.கே.பாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இடைத்தரகர்களாக செயல்பட்ட இவர்கள் குட்கா ஏஜெண்டுகளிடம் இருந்து பணம் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு கொடுத்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதன் அடிப்படை யில் சிபிஐ அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே ராயபுரத்தில் இன்ஸ் பெக்டர் சம்பத் வீட்டிற்கு இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சிப்காட் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். ஆறுமுகநேரியில் உள்ள இவரது இல்லத்திலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*