Home » Flash News » 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்:ஸ்டாலின்

7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்:ஸ்டாலின்

சென்னை, செப்.6: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையைக் கூட்டி ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரின் விடுதலையில் உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

குட்கா புகாரை முதன்முதலாக சட்டப்பேரவையில் எழுப்பியது திமுக தான். இந்த வழக்கின் தொடர்புடைய டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*