Home » Flash News » தெலுங்கானா மாநில அரசை கலைக்க பரிந்துரை:கவர்னர் ஏற்றார்

தெலுங்கானா மாநில அரசை கலைக்க பரிந்துரை:கவர்னர் ஏற்றார்

ஐதராபாத், செப்.6:தெலுங்கானா மாநில அரசை முன்கூட்டியே கலைக்க, அம்மாநில அமைச்சரவை செய்த பரிந்துரையை கவர்னர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டு உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் 2014 ஆண்டு நடந்த முதல் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் முதலமைச்சர் ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.
எனினும், சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

அன்று தனது அமைச்சரவையையும் கூட்டி விவாதித்தார். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதற்கு வசதியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அண்மைக்காலமாக அவருடைய அரசு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா அமைச்சரவை மீண்டும் இன்று கூடியது. கடந்த 5 நாட்களில் மந்திரி சபை கூடுவது 2–வது முறையாகும்.
இந்த கூட்டத்தில் தெலுங்கானா அரசை கலைக்க பரிந்துரைக்கபட்டது. இந்த பரிந்துரையை முதல்வர் சந்திர சேகரராவ் கவர்னர் நரசிம்மனை சந்தித்து அளித்தார்.

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*