Home » Flash News » இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல :உச்சநீதிமன்றம்

இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல :உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, செப்.6:இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

ஓரினச்சேர்க்கைக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண் டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்துள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின் 377–வது பிரிவு குற்றம் என்று கூறியிருந்தது.இயற்கைக்கு மாறாக உறவு கொண்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வகை செய்தது. இது தவிர அபராதமும் உண்டு. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர். எப் நாரிமன், ஏ எம் கான்வில்கர், டி ஒய் சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் 17–ந்தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பை தீபக் மிஸ்ரா வாசித்தார். அதன் விவரம் வருமாறு:

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையறுக்கும் சட்டப்பிரிவு ஆகும். இதில் இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல. ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது.

மற்ற குடிமகன்களுக்கு இருக்கும் உரிமை தன்பாலின உறவு கொள்பவர்களுக்கும் உண்டு. ஓரினச்சேர்க்கையை குற்றம் என்பது பகுத்தறிவற்றது மற்றும் அவமதிப்பானது.சமுதாயம் மாறினால்தான் முன்னேற்றம் அடையும். மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புஉச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*