Home » Flash News » தரமற்ற பால்: அதிர்ச்சியூட்டும் தகவல்

தரமற்ற பால்: அதிர்ச்சியூட்டும் தகவல்

புதுடெல்லி, செப்.6:நாட்டில் விற்பனையாகும் பெருமளவு பால் தரமானது அல்ல என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மனிதர்களின் அன்றாட உணவுப் பொருள் பட்டியலில் முதலிடத்தில் பார் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தும் பாலில் 68.7 சதவீதம் அளவுக்கு தரம் குறைந்தது என்ற தகவலை இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ளது.

மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நம் நாட்டில் பால் மற்றும் அதன் உப பொருட்கள் இருப்பதில்லை என்று வாரியம் தெரிவித்துள்ளது.

பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், ரீபைண்டு எண்ணெய் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அந்த வாரியம் கூறியுள்ளது.

பால் கலப்படத்தால் புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்கள் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*