Home » அரசியல் » திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு

திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு

சென்னை, செப்.5:என் மீது புகார்கள் கூறப்படுமானால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரசின் தமிழக பொறுப்பாளர்கள் சின்னாரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தின்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும், திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இளங்கோவன் ஆதரவாளர்கள் 7 பேரை கட்சியில் இருந்து நீக்கி திருநாவுக்கரசர் நடவடிக்கை எடுத்துள்ளார்.முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

என் மீது புகார்கள் கூறப்படுவதாக வும், இது தொடர்பாகவே அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் இன்று வந்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இது உண்மையானால் நான் ராஜினாமா செய்வேன் என்பதை சஞ்சய்தத்திடம் நான் ஏற்கனவே கூறிவிட்டேன். என் மீது பொய் பிரச்சாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். என் மீதான புகார்களை விசாரிப்பதற்காகவா மேலிடம் பிரதிநிதிகளை அனுப்பி இருக்கிறது? கட்சியின் வளர்ச்சிப்பணியை ஒருங்கிணைப்பு செய்வதற்காகவே அவர்கள் வந்திருக்கிறார்கள்.

மத்திய குழுவுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை ராகுல்காந்தி நியமித்தார். நாம் ஒன்று பட்டு ராகுல் பிரதமராக பாடுபட வேண்டும்.

எனக்கு யாருடனும் எந்த பிரச்சினையும் இல்லை. இளங்கோவன் எனது சகோதரர். இந்த கூட்டத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அதன் அடிப்படை யிலேயே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் நான் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். திமுகவுடன் கூட்டணி தேவையில்லை என்று நான் ஒருபோதும் கூறியது கிடையாது. திமுகவுடன் கூட்டு சேருவது நல்லது தான். அதே நேரத்தில் காங்கிரசையும் நாம் வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*