Home » Flash News » சிபிஐ சோதனை:திமுக,பாமக கேள்வி

சிபிஐ சோதனை:திமுக,பாமக கேள்வி

சென்னை,செப்.5:குட்கா விவகாரத்தில்சிபிஐ சோதனை நடத்திய பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன் என்று திமுக,பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கேள்வி விடுத்துள்ளனர்.

குட்காவிவகாரம் தொடர்பாக சென்னை உட்பட தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குட்கா முறைகேடு தொடர்பாக தாமதமாக நடத்தப்பட்டாலும் சிபிஐ சோதனை வரவேற்கத்தக்கது. குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை முன்பே நடந்திருக்க வேண்டும். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கையில், குட்கா ஊழலின் முக்கியக் குற்றவாளி அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் ஊழல் புகார்கள் கூறப்படுவதால், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்குப் பிறகும் அவரை பதவி நீக்காமல் காப்பாற்றி வருவதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்கள் நலன் காக்கும் அரசு அல்ல. ஊழல் அமைச்சர்கள் பதவி காக்கும் அரசு என்பது உறுதியாகியுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் குட்கா ஊழல் வழக்கில் சேர்க்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களை இன்னும் பதவியிலும், பணியிலும் நீடிக்க அனுமதிப்பதை ஏற்க முடியாது. எனவே, இனியும் தயங்காமல் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தமிழக அரசு பதவி நீக்கம், பணி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜி.கே. வாசன்:தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கையில், மத்திய புலனாய்வுத்துறை குட்கா சம்பந்தமாக தமிழகத்தினுடைய சுகாதார அமைச்சரையும், தமிழக டி.ஜி.பி யையும் அதோடு சந்தேகிக்கப்பட்ட 40 இடங்களில் சோதனை இடுவது, ஊழலுக்கான, தவறுக்கான ஆதாரத்தை நிருபிக்ககூடிய நிலையினை விரைவில் சி.பி.ஐ ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

இது போன்ற நிலை தமிழகத்தில் தொடருமேயானால், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மீது மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழக்கும் சூழல் ஏற்படும். இதுவரை தெரியாமல் இருப்பது போல, இப்பொழுதும் மத்திய அரசு செயல்படக் கூடாது. இல்லையெனில் மக்கள் மத்திய அரசின் மீதும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இவ்வாறு வாசன அறிக்கையில் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*