Home » சினிமா » விஜய்யுடன் மோதும் தனுஷ்

விஜய்யுடன் மோதும் தனுஷ்

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிக்குமார், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மறு வார்த்தை பேசாதே, விசிறி பாடல்கள் இளசுகள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில் படம் தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவு குறித்து ட்விட் செய்துள்ள இயக்குநர் கவுதம் மேனன், படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், தனுஷ், சசிக்குமார் மற்றும் படக்குழுவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு ஏற்கெனவே சர்கார் மற்றும் என்ஜிகே ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் என்ஜிகே ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் சர்காருக்கு நேரடி போட்டியாக எனை நோக்கி பாயும் தோட்டா களம் இறங்க உள்ளது.

 

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*