நியூயார்க், செப்.5: முன்னாள் குத்து சண்டை வீரர் மைக்டைசன் இந்தியா வருகிறார் என கூறப்படுகிறது.
குத்துச்சண்டை உலகத்தில் மிகவும் புகழ் பெற்றவர் மைக் டைசன். இவருக்கு ரசிகர்கள் ஏராளம் குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டைசன், குத்துச்சண்டையில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். மைக்டைசன் முதன்முறையாக மும்பைக்கு வருகை தருகிறார்.
இந்திய கலப்பு தற்காப்புக் கலை அமைப்பாலும், உலக கிக்பாக்சிங் கூட்டமைப்பாலும் ஆதரிக்கப்பட்ட லீக் தொடர் மும்பையில் வரும் 29 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை துவக்கி வைப்பதற்காக மைக் டைசன் முதன்முறையாக இந்தியா வர உள்ளதாக கூறப்படுகிறது.