This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Sat Sep 22 16:46:15 2018 / +0000 GMT

ஜப்பானை புரட்டிப்போட்ட புயல்


டோக்கியோ, செப்.5:ஜப்பானை கடந்த 216 கி.மீ வேகத்தில் தாக்கி ஜெபி புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக சக்திவாய்ந்த புயல் ஜப்பானை தாக்கியது. இந்த புயலக்கு ஜெபி என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த சூறாவளியால் பல ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வீடுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று உள்ளூர் நேரப்படி பகல் 12 மணி அளவில் ஷிகோகோ தீவில் இந்த சூறாவளி கரையை கடந்தது. பின்னர், இந்த சூறாவளி ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹான்ஷுவை நோக்கி முன்னேறியது.
Post date: 2018-09-05 10:47:06
Post date GMT: 2018-09-05 10:47:06
Post modified date: 2018-09-05 11:05:11
Post modified date GMT: 2018-09-05 11:05:11
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com