Home » Flash News » சிறுமியை கற்பழித்து கொன்று கண்களை தோண்டிய கொடூரம்

சிறுமியை கற்பழித்து கொன்று கண்களை தோண்டிய கொடூரம்

ஸ்ரீநகர், செப்.5:காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 9 வயது சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவளை கொலை செய்து கண்களை தோண்டிய கொடூரச் செயல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு காரணமான சிறுமியின் தந்தையின் முதல் மனைவி, அவளது மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரி என்ற இடத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த மாதம் 23-ம் தேதி முதல் காணவில்லை என அவளது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
10 நாட்கள் கழித்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியது. விசாரணையில் சிறுமியின் தந்தையின் முதல் மனைவி, அவளது மகன் மற்றும் சிலர் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது.

தனது கணவர் இரண்டாவது மனைவி மற்றும் அவளது குழந்தைகளிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டதால் பெரும் வெறுப்படைந்த முதல் மனைவி,
சிறுமியை கடத்திச் சென்று, தனது மகன் மற்றும் அவனது நண்பர்களுடன் சிறுமியை கழுத்தை நெரித்தாக கூறப்படுகிறது. அவளது மகன் சிறுமியின் தலையில் கோடாரியால் வெட்டியதில் அவளது உயிர் பிரிந்தது. அதன் பின்னர் சிறுமியின் கண்களை தோண்டி எடுத்து சின்னாபின்னப்படுத்தினர்.
சிறுமியை கொல்வதற்கு முன்பாக மகனின் நண்பர்களுக்கு அவளை விருந்தாக்கியதுடன் அதை பார்த்து ரசித்ததுதான் உச்சபட்ச கொடூரமாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*