Home » Flash News » பறக்கும் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதி

பறக்கும் ரெயிலை கவிழ்க்க மீண்டும் சதி

சென்னை, செப்.5: தரமணி அருகே தண்டாவளத்தில் சிமெண்ட் சிலாப் வைத்து பறக்கும் ரெயிலை கவிழ்க்க செய்த சதி குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2-வது முறையகா நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

நேற்று இரவு 9 மணி அளவில் வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி பறக்கும் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் தரமணி-பெருங்குடி இடையே வந்த போது தண்டவாளத்தின் குறுக்கே ஒரு பெரிய சிமெண்ட் சிலாப் வைத்திருந்தது ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் வேகத்தை குறைத்து ரெயிலை நிறுத்துவதற்காக முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ரெயில் என்ஜின் அந்த சிலாப் மீது ஏறியதில் அது நொறுங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதால் எந்த ஒரு விபத்தும் ஏற்படாமல் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவர் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதேபோன்று கடந்த 2-ம் தேதி அன்று வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையம் அருகே சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் ஓட்டுனர் கண்டுப்பிடித்ததால் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் பறக்கும் ரெயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப் வைக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2-வது முறையாக ரெயில் தண்டவாளத்தில் சிமெண்ட் சிலாப் வைத்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ரெயில் தண்டவாளத்தில் வைத்திருந்த சிமெண்ட் சிலாப் சரிவர தெரியவில்லை என்றும் அருகில் போனபிறகு
சிமெண்ட் சிலாப் தெரியவந்தது. அதனால் சிலாப் மீது ரெயில் ஏறி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*