Home » Flash News » எம்எல்ஏவுக்கு நிச்சயித்த பெண் பரபரப்பு வாக்குமூலம்

எம்எல்ஏவுக்கு நிச்சயித்த பெண் பரபரப்பு வாக்குமூலம்

ஈரோடு, செப்.5: என் தந்தை வயது உள்ளவரை எவ்வாறு மணப்பது என்ற மன வேதனையில் தான் வீட்டை விட்டு சென்றதாக அதிமுக எம்எல்ஏவுக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த மணப்பெண் கூறியிருக்கிறார்.

இந்த திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ மன்றாடியபோதிலும் தன்னை கட்டாயப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன். இவருக்கு வயது 43. இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த சந்தியா என்ற 23 வயது பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

வரும் 12ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெற விருந்த இந்த திருமணத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு சென்ற மணப்பெண் சந்தியா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சந்தியாவை தேடி வந்த போலீசார் திருச்சியில் உள்ள சத்யா என்பவரின் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை மீட்ட போலீசார் கோபிச்செட்டிப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது வீட்டை விட்டு போக வேண்டிய காரணம் என்ன என்று நீதிபதி விசாரித்தார்.

அதற்கு சந்தியா, ‘இந்த திருமணம் எனக்கு பிடிக்கவில்லை. மாப்பிள்ளைக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகமாக இருக்கு. 20 வயது வித்தியாசம் உள்ள என் தந்தையைப் போன்றவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி வீட்டில் மன்றாடினேன்.

ஆனால் என்னை கட்டாயப்படுத்திதான் ஏற்பாடுகள் செய்தனர். அதனால் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன் என்று நீதிபதியிடம் சந்தியா வாக்குமூலம் அளித்தார். இதனிடையே, எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயித்துவிட்டதாகவும், குறித்த முகூர்த்தத்திலேயே திருமணம் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*