Home » Flash News » நடிகை ஹன்சிகாவை மிரட்டிய தயாரிப்பாளர்

நடிகை ஹன்சிகாவை மிரட்டிய தயாரிப்பாளர்

சென்னை, செப்.4:  பிரபல நடிகை ஹன்சிகாவை தன் படத்தில் நடித்து கொடுக்கவில்லை என்றால் தமிழ் படங்களில் நடிக்க முடியாது என மிரட்டிய தயாரிப்பாளரால் தமிழ் சினிமா உலகம் மிரண்டு போய் உள்ளது. மேலும் சம்பள பணத்திற்காக அவர் கொடுத்த ரூ.40 லட்சதிற்கான செக் வங்கியில் பணமில்லாமல் பவுன்ஸ் ஆனது.

எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பஞ்சாபி பெண்ணான இவர் விஜய், விக்ரம், ஜெயம்ரவி, சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகிகள் வரிசையில் உள்ளார். சமீபத்தில் இவர் நடிக்க உள்ள 50-வது படமான மகா படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

இதனிடையே அதர்வா கதாநாயகனாக நடிக்கும் 100 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படத்தை ஆரவ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் மகேஷ் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக ஒரு பெரிய தொகை ஹன்சிகாவுக்கு பேசப்பட்டது. அதில் அட்வான்ஸ் போக பாக்கி ரூ.40 லட்சத்திற்கான தொகையை 4 செக்காக மகேஷ் கொடுத்துள்ளார். இந்த செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.

இந்நிலையில், படத்தில் விடுபட்டுள்ள சில காட்சிகளை படமாக்க 3 நாள் கால்ஷீட் வேண்டுமென ஹன்சிகாவிடம் தயாரிப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு ஹன்சிகா தரப்பில் தாங்கள் கொடுத்த செக்குகள் பவுன்ஸ் ஆகி உள்ளது. அந்த தொகையை கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றார் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

உடனே ஆவேசமான தயாரிப்பாளர் எங்கள் படத்தில் நடிக்கவில்லை என்றால் தமிழ் சினிமாவில் நீங்கள் நடிக்க முடியாது என மிரட்டல் விடும் தொனியில் பேசி உள்ளார். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*