Home » Flash News » வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க டிபன் பாக்ஸ், டீ கப் மாயம்

வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க டிபன் பாக்ஸ், டீ கப் மாயம்

ஐதராபாத், செப்.4: ஐதராபாத் அருகே நிஜாம் அருங்காட்சியகத்தில் கொள்ளையர்கள் நுழைந்து ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க டிபன் பாக்ஸ், தங்க டீ கப் ஆகியவற்றை திருடிசென்று விட்டனர். இந்த கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை போலீஸ் அமைக்கபட்டுள்ளது.

ஐதராபாத் புறநகரில் உள்ள புரனிஹவேலி என்ற பகுதியில் உள்ள அருஙகாட்சியகத்தில் நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்கத்தினால் ஆன பொருட்கள் மற்றும் பழங்கால பாரம்பரிய பொருட்கள் காட்சிக்காக வைப்பட்டுள்ளன. சம்பவத்தன்று நள்ளிரவு சில மர்ம ஆசாமிகள் சுவற்றில் கயிறு கட்டி ஏறி மரத்திலான வென்டிலேட்டரை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதன் அடியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை திருப்பி வைத்து இருக்கிறார்கள்.

பின்னர் அருங்காட்சியகத்தில் நுழைந்து 7 வது நிஜாம் மன்னர் மிர் ஆஸ்மான் அலி கான் பயன்படுத்திய தங்கத்தினால் ஆன 2 கிலோ எடையுள்ள 3 அடுக்கு டிபன் பாக்ஸ், தங்கத்தினால் ஆன தேநீர் கோப்பை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிவிட்டனர். இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.50 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளைபோன பொருட்கள் 1937 ல் ஐதராபாத்தை ஆட்சி செய்த நிஜாம் மன்னர் மீர் காசீம் பயன்படுத்தியது ஆகும். இவர் இந்த பொருட்களை அருங்காட்சியகத்திற்கு தானமாக வழங்கி இருந்தார். இந்த அருங்காட்சியகத்தில் ரூ.250 கோடி முதல் ரூ.500 கோடி மதிப்பிலான அரிய பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*