Home » Flash News » சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

சென்னை, செப்.4:  பறக்கும் விமானத்தில் பயணிகள் மத்தியில் பிஜேபிக்கு எதிராக கோஷமிட்ட மாணவி சோபியாவின் நடவடிக்கையை கண்டித்துள்ள தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு அறிவுரையுடன் ஜாமீன் வழங்கி உள்ளது.

பிஜேபி மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்ற விமானத்தில், அவருக்கு பிந்தைய இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த சோபியா திடீரென ‘பாசிச பிஜேபி ஆட்சி ஒழிக’ என்று கோஷமிட்டார். விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுபிள்ளைத்தனமாக அந்த மாணவி நடந்து கொண்டதை பார்த்த தமிழிசை, அப்போது ஒன்றும் கேட்கவில்லை.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கிய பின்னரும் மாணவி சோபியா, தமிழிசையை பார்த்து அதே போன்று கோஷமிட்ட போது தமிழிசை அதை தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின்னர், தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சோபியா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோபியாவின் நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சோபியாவின் சிறுவயதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கிய நீதிபதி, பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என சோபியாவுக்கு அறிவுரை வழங்குமாறு அவரது பெற்றோருக்கு உத்தரவிட்டார்.

ஸ்டெர்லைட் போராட்ட களமான தூத்துக்குடியை சேர்ந்த சோபியா. கனடா நாட்டில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவி ஆவார். நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாகவே, பிஜேபி மாநிலத்தலைவர் தமிழிசை

சௌந்தரராஜன் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவே அவர் வேண்டுமென்றே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு அடையாளமாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*