Home » சினிமா » திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிக்க கூடாதா? ஸ்ரேயா ஆவேசம்

திருமணத்திற்கு பின் நடிகைகள் நடிக்க கூடாதா? ஸ்ரேயா ஆவேசம்

துருவங்கள் 16 படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய உள்ள படம் நரகாசுரன். இதில் அரவிந்தசாமி ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். படம் பற்றி ஸ்ரேயா கூறியதாவது:- நரகாசுரன் படத்தில் அரவிந்தசாமி மனைவியாக வருகிறேன். ஊட்டியில் படப்பிடிப்பு நடந்தது. த்ரில்லர் கலந்த சஸ்பெண்ஸ் கதை என்பதால் என் கேரக்டர் பற்றி அதிகமாக சொல்ல முடியாது. ஒரு மலை பிரதேசத்தில் 5 பேர் செல்கிறார்கள்.
அங்கே என்ன நடக்கிறது என்பது தான் கதை. நானும், அரவிந்தசாமியும் ஒரு ஜோடி, சந்தீப்கிஷனும், ஆத்மிகாவும் ஒரு ஜோடி. அரவிந்தசாமியுடம் நடித்தது மறக்க முடியாத அனுபவம். 3 மாதங்களுக்கு முன்பு இந்த ஸ்கிரிப்டை படித்து விட்டு கதையில் ரசித்து நடித்தேன். சமீபத்தில் எனக்கு திருமணம் ஆகி விட்டது. அது பற்றி பேச விரும்பவில்லை.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடிப்பீர்களா? குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? என்று எந்த ஹீரோக்களிடமும் யாரும் கேட்பதில்லை. நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். என் அழகு உடல் அமைப்பிற்கு நடனம் தான் காரணம். கதக், தியானம் ரொம்ப பிடிக்கும். அதிகமாக டிராவலிங் போவது பிடிக்கும்.  காஞ்சிபுரம் பட்டுப்புடவை ரொம்ப பிடிக்கும். அதபோல் பிரபலங்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. நடனம் சம்மந்தப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*