w
Home » Flash News » விமானத்தில் நடந்தது என்ன?: தமிழிசை

விமானத்தில் நடந்தது என்ன?: தமிழிசை

சென்னை, செப்.4: தூத்துக்குடிக்கு சென்ற போது விமானத்தில் என்ன நடந்தது என்ற விவரத்தை பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கி உள்ளார். கோஷமிட்ட பெண்ணின் நடவடிக்கையால் தன்னுடைய உரிமை பாதிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து இன்று காலை சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியில் விமானத்தில் நான் அமர்ந்து இருந்தபோது பின்னால் இருந்த பெண் திடீரென கைகளை உயர்த்தி தரக்குறைவாக பிஜேபியையும், என்னையும் எதிர்த்து கோஷமிட்டார். விமானம் என்பதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக நான் மவுனம் காத்தேன். பின்னர் வெளியில் வந்தபோதும் அந்த பெண் கோஷம் போட்டார் .அப்போது நீங்கள் செய்வது சரியா? என்று கேட்டேன். விமானத்திற்குள் இப்படி கோஷம் போடலாமா என்றேன்.

இதுகுறித்து விமான நிலைய ஆணையத்தில் புகார் கொடுத்தேன் போலீசில் நேரடியாக நான் புகார் கொடுக்கவில்லை.

இந்த சம்பவத்தில் அந்த பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை மு.க.ஸ்டாலின் கண்டித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் விமானத்தில் இருக்கும்போது அவரை எதிர்த்து கோஷம் போட்டால் சும்மா விடுவார்களா? கருத்துரிமை பற்றி பேசும் திமுகவினருக்கு தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறேன்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலை தலைவர்கள் கண்டிக்க வேண்டும் அதை விடுத்து பிஜேபியை தானே எதிர்த்தார் என்று ஆதரவாக அறிக்கை வெளியிடுகிறார்கள்.

இன்று பிஜேபிக்கு நடந்த இந்த செயல் நாளை அவர்களுக்கு எதிராக நடந்தால் சும்மா விடுவார்களா? கோஷம் எழுப்பிய பெண் தானாக செயல்படவில்லை. அவருக்கு பின்புலம் உள்ளது.

அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*