Home » சினிமா » 7-ல் ‘வஞ்சகர் உலகம்’

7-ல் ‘வஞ்சகர் உலகம்’

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம்,  சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். வரும் 7-ம் தேதி இப்படம் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் மனோஜ் பீதா கூறுகையில், நான் செல்வராகவனின் பெரிய ரசிகன். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கட் அடித்து விட்டு புதுப்பேட்டை படம் பார்த்தேன்.

அந்த படம் பார்த்தபோதே நாங்கள் படம் எடுத்தால் அழகம் பெருமாள் அந்த படத்தில் இருக்கணும்னு நினைத்தோம். சமூகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது தான் இந்த படம். குரு சோமசுந்தரம் மைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். சாம்மின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. வசனங்களை எழுதி உள்ள சாந்தினி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*