Home » சினிமா » சேது படம் பெரிய இழப்பு: விக்னேஷ்

சேது படம் பெரிய இழப்பு: விக்னேஷ்

பாரதிராஜா, பாலுமகேந்திரா, வி.சேகர் உட்பட பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தவர் விக்னேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என 52 படங்களில் நாயகனாக நடித்து தனது 52 வது படமான ஆருத்ரா படத்தில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் விக்னேஷ்.
இந்த படத்தில் ஏன் வில்லனாக நடித்தேன் என்பது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று ஒரு பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் எனக்கு உண்டு. அதற்காக நான் சோர்ந்து போய் விட வில்லை.

சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி என்னை நடிக்க கேட்டார். கதையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன். ஏன் விக்னேஷ் தயக்கம். இந்த கதையில் சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த படம் இது. மிஸ்ஸாகி விட்டது. இப்ப நான் ஹீரோ நீங்க வில்லன், இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படனும்னு நினைத்து தான் இந்த படத்தை எடுக்கிறோம் நீங்க நடிங்க கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்னு சொன்னார். நடிச்சேன் படத்தோட டப்பிங் முடிச்சிட்டு யோசிச்சேன் இவ்வளவு கொடூரமான வில்லனாகவா நடிச்சோம் என்று.

படத்தில் செய்த தவறுக்கு பிராயசித்தம் செய்கிற மாதிரி காட்சியை எடுத்த இயக்குனர் அதை கட் செய்தது எனக்கு வருத்தம் தான். இதன் மூலம் ஒவ்வொரு பெற்றோருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள். தயவு செய்து நண்பர்கள் சொந்தக்காரர்கள் யாராக இருந்தாலும் அளவோடு பழக விடுங்கள் என்பது தான்.
சேது படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதை எண்ணி தினமும் வருத்தப்படுகிறேன். பாலாவும் நானும் ரூம் மேட்ஸ். பல பிரச்சனைகளை சந்தித்ததால் நான் நடிக்க முடியாமல் போனது. இதை விட கொடூரமான வில்லனா நடிக்க பாலா கூப்பிட்டா உடனே ஒத்துக்கொண்டு நடிப்பேன் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*