Home » இந்தியா » ஸ்டெர்லைட் ஆலை வழக்கு அவசரமாக விசாரிக்க மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு அவசரமாக விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி, செப்.4: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பிரிவு செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. தமிழக அரசின் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் மாநில மாசுக் கட்டுபாட்டு வாரியம் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்த குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் ஆலையின் நிர்வாக பிரிவு செயல்படலாம் என்றும், உற்பத்தி பிரிவு இயங்கக் கூடாது என்றும் ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பளித்தது.

நிர்வாக பிரிவு செயல்பட அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு ஆகஸ்ட் 14-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்விலேகர் டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*