Home » விளையாட்டு » ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க், செப். 4:  முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்துவரும் நிலையில், நேற்றிரவு நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் – 68-வது இடம் வகிக்கும் போர்ச்சுகீஸின் ஜோயாவ் சௌசாவை எதிர்கொண்டார். 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஜோகோவிச் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஜோகோவிச் தனது காலிறுதிப்போட்டியில், ரோஜர் பெடரர் அல்லது ஜான் மில்மனை எதிர்கொள்வார்.

மற்றொரு ஆட்டத்தில், ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனின் பிலிப் கொஹ்லஸ்ச்ரேயபரை தோற்கடித்தார். காலிறுதியில் நிஷிகோரி, குரோஷியாவின் மரின் சிலிக்குடன் மோதுகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*