Home » விளையாட்டு » ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணியில் மாற்றம்

ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணியில் மாற்றம்

லண்டன், செப். 4:  இங்கிலாந்திற்கு எதிரான 5-வது டெஸ்ட்டில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலுமே சரியாக பேட்டிங் செய்யாத ராகுலுக்கு பதிலாக, 19 வயதே ஆன இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, மீண்டும் அஸ்வின் காயமடைந்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படலாம் எனவும் தெரிகிறது. அஸ்வின் முதல் டெஸ்டிற்கு பிறகு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறிவருகிறார். ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக மீண்டும் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாம்.

இவ்வாறு இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் மைதானத்தில் செப்டம்பர் 7-ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*