Home » விளையாட்டு » விராத் கோலியின் கேப்டன் பதவிக்கு ஆப்பு?

விராத் கோலியின் கேப்டன் பதவிக்கு ஆப்பு?

மும்பை, செப். 4:  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி நெருக்கடியான நிலையில் இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் 2 டெஸ்ட்களில் தோல்வியை தழுவி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான இந்திய அணி, 3-வது டெஸ்ட்டில் அபாரமாக விளையாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ்வாறு தொடர் தோல்வியிலிருந்து மீண்ட இந்திய அணி அதை தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் தொடரை பறிகொடுத்துவிட்டது.

இந்த நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணியில் 5 பிரத்யேக பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே கோலியை சார்ந்தே இருக்கிறார்கள். எல்லா போட்டியிலும் கோலியால் சதமடிக்க முடியாது. அவர் மனிதன் தானே தவிர எந்திரம் அல்ல. தோனியிடம் இருந்து டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் கோலியிடம் சென்றபோது இந்திய அணி நிச்சயம் வீழும் என நினைத்தனர்.

ஆனால் அந்த கூற்றை பொய்யாக்கும்படி, கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது. ஆனால் தற்போது ஒரு வீரராக சிறப்பாக செயல்படும் கோலி, கேப்டனாக சொதப்புகிறார்.

முக்கியமாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நான்கு ஆண்டுகள் கோலி கேப்டனாக இருந்தாலும் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க கோலிக்கு தெரியவில்லை. வீரர்கள் சரியாக ஆடாத நிலையில், கேப்டனோ பயிற்சியாளரோ என்ன செய்ய முடியும்? எனினும் கோலி இப்போது நெருக்கடியான நிலையில் இருக்கிறார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*