Home » Flash News » ஆட்டோ கட்டணத்தை விட குறைவான விமான கட்டணம்

ஆட்டோ கட்டணத்தை விட குறைவான விமான கட்டணம்

புதுடெல்லி, செப்.4: ஆட்டோவில் பயணம் செய்ய வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இன்றைய நிலையில் விமான கட்டணம் குறைவாக உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த்  சின்ஹா தெரிவித்துள்ளார்.

இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பின்வரும் விளக்கத்தை அளித்தார்.

இரண்டு பேர் ஆட்டோவில் பயணம் செய்தால் ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அப்படியானால் நபர் ஒருவருக்கு 5 ரூபாய் கட்டணமாகிறது. அதுவே விமான பயணத்தில் கிலோ மீட்டருக்கு 4 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இழப்பை சந்தித்துள்ள நிலையில், அமைச்சரின் விளக்கம் சர்ச்சைக்கு காரணமாகி உள்ளது. எரிபொருள் விலைக்கு ஏற்ப விமான கட்டணத்தை உயர்த்தாததே, இந்த இழப்புக்கு காரணம் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*