Home » குற்றம் » அரசு அதிகாரி கார் மோதி 3 பெண்கள் பலி

அரசு அதிகாரி கார் மோதி 3 பெண்கள் பலி

திருச்சி, செப். 4: திருச்சி அடுத்த முக்கொம்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடிய போது அங்கு பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து காரை ஓட்டி வந்த பொதுப்பணி துறை உதவி பொறியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பாப்பக்கா பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது40). கட்டிட மேஸ்திரி. இவரது தலைமையில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் சித்தாள் வேலை செய்யும் பெண்கள் திருச்சி அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பகுதியில் ஒரு வீட்டின் கட்டிட வேலைக்காக தினமும் வந்து சென்றனர்.

நேற்று மாலை வேலை முடிந்து சிறுகமணி பஸ் நிறுத்தத்தில் நின்றனர். கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்தது.இதைபார்த்து அங்கு நின்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். அப்போது அந்த கார் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் கட்டிட மேஸ்திரி வடிவேல் மற்றும் குளித்தலை பொய்யாமணியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சித்ரா (வயது 30), ஆறுமுகம் மனைவி கோமதி வயது40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கட்டிட தொழிலாளர்கள் பாப்பாத்தி(வயது30), கோமதியின் மாமியார் ரங்கநாயகி(வயது55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பெட்ட வாய்த்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து பலியான 3 பேர் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் திருச்சி-கரூர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.காரை ஓட்டிவந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தயாளகுமாரை, பெட்டவாய்த்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி ருகிறார்கள்.

கார்மோதி கட்டிடவேலைக்குசென்று திரும்பிய 3 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*