Home » சினிமா » கிராமத்து வாழ்வியலை சொல்லும் ஏகாந்தம்

கிராமத்து வாழ்வியலை சொல்லும் ஏகாந்தம்

அன்னை தமிழ் சினிமாஸ் சார்பில் ஆர்செல் ஆறுமுகம் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ஏகாந்தம். இப்படத்தில் நாயகனாக விவாந்த் நடிக்கிறார். இவர் 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளவர். நாயகியாக நீரஜா நடிக்கிறார்.

இவர் 5க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர்களுடன் தென்னவன், சர்மிளா, கௌதம் கிருஷ்ணா, சாந்தி ஆனந்த், விஜய் டிவி ராமர் மற்றும் சசிகலா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்திற்கு பூபதி ஒளிப்பதிவு செய்ய, அகமது எடிட்டிங் மேற்கொள்கிறார். எல்.பி.லோகு கலை அமைக்க கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். படம் குறித்து இயக்குனர் கூறுகையில், நகரம், நாகரீகம் தேடி சொந்த கிராமத்தை விட்டு புலம் பெயரும் மனிதர்கள், உறவு, பண்பாடு, மனித நேயம் போன்ற அடையாளங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதை கிராமத்து பின்னணியிலும், நகரம் சார்ந்த வாழ்க்கை முறை கிராமத்து மனிதர்களை பயமுறுத்துகிறது என்பதை சொல்லும் வாழ்வியல் பதிவு தான்
இது என்றார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*