Home » சினிமா » என்னைத்தான் போட்டியாக நினைக்கிறேன்:சிவகார்த்திகேயன்

என்னைத்தான் போட்டியாக நினைக்கிறேன்:சிவகார்த்திகேயன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் சீமராஜா. இதில் சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்திருக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24ஏஎம் ஸ்டூடியோஸ் மிகப்பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த சீமராஜா விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகிறது. ஏற்கனவே மதுரையில் மிக பிரமாண்டமாக வெளியாகிய டீசர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது:-

இந்த ட்ரெய்லரின் கடைசி 3 ஷாட் பார்த்து சமூக வலைத்தளங்களில் பாகுபலி மாதிரி இருக்கு என பாராட்டுக்கள் இருந்தன. அது எங்கள் உழைப்புக்கு கிடைத்த பெருமை. இந்த படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் குழந்தைகளும் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாமல் செய்திருக்கிறோம். இந்த படத்திலும் காமெடி நிறையவே இருக்கிறது. நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, யாரை பார்த்தும் பயப்படுவதில்லை, எனக்கு பொறாமையும் கிடையாது, என்னைத்தான் நான் போட்டியாக நினைக்கிறேன். அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே நான் பயணிக்கிறேன்.

இங்கு யார் வேண்டுமானாலும் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யலாம். மக்களுக்கு பிடித்ததை கொடுத்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர். சூரி கூட உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஜீன்ஸ், டிசர்ட் என யூத்தாக வருகிறார். விரைவில் அவரும் கதாநாயகனாக நடிப்பார் என நம்புகிறேன்.
பொன்ராமுடன் மூன்றாவது முறையாக இணைந்தது மகிழ்ச்சி. சமந்தா சிறப்பாக நடித்துள்ளார். சிம்ரனுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது. அதே போல் நெப்போலியன், லால் ஆகியோரும் படத்தில் கலக்கி உள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*